Lyrics

பல்லவி:

புதியதோர் புதியதோர் தொடக்கம்
வாழ்வை இது வாழ்வை இது வளர்க்கும்
புதியதோர் புதியதோர் தொடக்கம்
உலகை இது உலகை இது எழுப்பும்

அனுபல்லவி:

மகிழ்ச்சியைத் தேடும் மனதிற்கும்
ஒற்றுமைத் தேடும் உறவுக்கும்
நிம்மதி தேடும் யாவர்க்கும்
அன்பைத் தேடும் அனைவர்க்கும்

சரணம்:

தோல்வியின் வலிகளை மறந்திட
வெற்றியின் படிகளில் ஏறிட
காலத்தை நீயும் வென்றிட
சரித்திரம் நாளும் படைத்திட