Lyrics

பல்லவி:

வினா தொடுக்கின்ற மனமே
வினா தொடுக்கின்ற மனமே
விடை பெறுகின்ற இடமே - நீ
விடை பெறுகின்ற இடமே

அனுபல்லவி:

மனித வாழ்க்கையின் மர்ம முடிச்சுகளை
அவிழ்க்கின்ற அற்புத களமே
மனித வாழ்க்கையின் மர்ம முடிச்சுகளை
அவிழ்க்கின்ற அற்புத களமே... களமே... களமே...


சரணம்:

காணும் கனவுகள் யாவுமே
கைவர பெறுவது நேருமே
வாழ்வின் தேடல்கள் யாவுமே
வரமாய் போகுது நாளுமே

உனக்குள் லட்சியம் பிறப்பெடுக்கும்
உள்ளத்தில் புதியதோர் வழி பிறக்கும்
நீ பயணிக்கும் பாதையில் துணையிருப்போம்
வரும் தடைகள் யாவுக்கும் விடை கொடுப்போம்
வரும் தடைகள் யாவுக்கும் விடை கொடுப்போம்
விடை கொடுப்போம்... விடை கொடுப்போம்...
விடை கொடுப்போம்