Musicians Credits:

Flute - Nathan
Nadaswaram - Bala
Dholak, Tabla & Tavil - Shruthi Raj
Bass Guitar - Keith Peters
Chorus - Sri Ranjani, Lavanya, Vikram & Aravind
Musicians co-ordinator - Elangovan Sujatha

Mixing Engineer - Pg Ragesh @ Krishna Digi Design

Assistant Music & Mastering Engineer - Ramamurthi Sankerganesh

Lyrics

Pallavi:
ஆதியில் ஆட்சி கண்டாய்
ஆயிரம் ஆற்றல் கொண்டாய்
இடையினில் எங்கோ சென்றாய்
இடியெனத் திரும்பி வந்தாய்

Chorus:
பெண்ணே
ஓ பெண்ணே
அந்த விண்ணே உன் எல்லையே
பெண்ணே
ஓ பெண்ணே
இந்த மண்ணே உனை வணங்குமே

நேற்று பேசிடா கிளியடி
இன்று கீழடி தாயடி
வைய மெங்கிலும் நீயடி
மைய மாயினாய் பாரடி

Charanam 1:
கூர் முட்கள் உந்தன் பாதங்களை
முத்தமிட்டு தினம் வம்பிழுக்கும்
சீர் கெட்டு நாளும் சிறைபிடிக்க
போர் பாட்டுபல படையெடுக்கும்
நேர் பார்வையாலே சமர் பலசெய்து
சத்திமில்லா சம நீதி வென்றாய்
சீர் தூக்கும் துலாவென ஆகிநீயும்
புத்தாக்கம் செய்திடும் யாக்கையாகினாய்!

பெண்ணே
ஓ பெண்ணே
நீ
வான்விளக்காய் வான்மதியாய்
பெருமழையாய் பெருநதியாய்
காற்றலையாய் கடலலையாய்
கடுங்குளிராய் சுடும்நெருப்பாய்

Charanam 2:
ஆற்றலாயிரம் ஊற்றடெடுத்திட மின்னகமாய் உன்னகமே.
பூக்களாயிரம் பூத்தொடுத்திட மண்ணெங்குமே பொன்முகமே
சிறைகளாயிரம் சிறகசைசைத்திட துறைகள்யாவுமே விரல்வசமே
வாரணமாயிரம் இசையெழுப்பிட உலகம் யாவுமே புதுயுகமே

பெண்ணெ
ஓ பெண்ணே
நீ
புதுமழையாய்
பூம் பொழிலாய்
தனி மொழியாய்
நீர்ச் சுழியாய்
தீ துளியாய்
கருக் குழியாய்
கை உளியாய்
சக தோழியாய்
தாய் காளியாய்


அச்சம் அகன்றிட நாணம் விலகிட
துச்சம் அவையென நெஞ்சம் நிமிர்ந்திட
குத்து விளக்கில்லை குன்று விளக்கென
அற்றம் காத்திடும் அறிவை மூட்டிட
வானம் ஏறிட வையம் தீண்டிட
மோதிப் புயலென தடைகள் தாண்டிட
மோன நிலவென ஞாலம் நிறைந்திட்டாய்
போதி மரமென ஞானம் எய்திட்டாய்.