From the recordings "Alai Kadal Oli Meenae" - Music Composed, Produced, Arranged & Sung by S. J. Jananiy. and Collection of S. J. Jananiy's Playback, Pop, Fusion, Classical Vocal & Keyboard, Bhajan, Western Classical & Carnatic Symphony.
எம்மின இதயங்கள் இன்றுனை
அன்பும் உண்மையும் இசைந்து பாடும்
உனக்கு உரிமையாகி உயர்ந்தோம்
பெருமை தந்து சிறந்தோம்
என் வாழ்வு பாதையிலே
வழிகாட்டும் வான்விளக்கே
அலைகடல் ஒளி மீனே!
எம் அறிவுறு செந்தேனே!
கடும் புயலும் கார் இருளும் சேர்ந்தாலும்
எம் விழிகள் உம் துணையை நாடும்
ஆன்ம பேரொளி நிறைந்திடவே
அலைகடல் ஒளி மீனே!
எம் அறிவுறு செந்தேனே!
நன்மையும் வாய்மையும் - உயர்
எண்ணமும் திண்ணமும் தந்து
எமை முன் செலுத்தும் பேரொளியே!
அனைத்தையும் ஆளும் அன்பே!
அலைகடல் ஒளி மீனே!
எம் அறிவுறு செந்தேனே!
அறிவுத் தாயகமே
அருள் நெஞ்சமும் மாறா வீரமும்
ஆளும் தலைமையும் அயராதுழைத்து
தாய் திரு நாட்டினைத் தரணியில் உயர்த்திட
பொற்புடை மாதரை அளித்திட
உனையே நோக்கும் நம் ஆருயிர் பாரதம்!
அலைகடல் ஒளி மீனே!
எம் அறிவுறு செந்தேனே!