




From the recording Vaazhga Tamizh Mozhi - Composer, Music Producer & Singer - S. J. Jananiy
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஓங்க
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.