Lyrics

கேளுங்க கேளுங்க முதியோரே கேளுங்க

இளயோரே கேளுங்க சிறியோரே கேளுங்க

உங்க காதகொஞ்சம் தெறந்து வச்சு கவனமாக கேளுங்க

உங்க காதகொஞ்சம் தெறந்து வச்சு கவனமாக கேளுங்க



போதை என்ற பொதகுழியில் மாட்டிகிட்டு தவிப்போரே கேளுங்க

அதில் வேகமாக போய்விழ துடிப்போரும் கேளுங்க

உங்க காதகொஞ்சம் தெறந்து வச்சு கவனமாக கேளுங்க

உங்க காதகொஞ்சம் தெறந்து வச்சு கவனமாக கேளுங்க



உதிரத்தையே பாலாக்கி ஊட்டிவளர்த்த தாய்பாலால்

உயிர்ப்பெற்று வளர்ந்ததிந்த உடம்புங்க

அதில் மதுவை ஊற்றி மயங்கடிப்பது யாரு தந்த அறிவுங்க

பத்தியமாய்தானிருந்து பத்துமாதம்தான் சுமந்து

பக்குவமாய் பெற்றெடுத்த உடம்புங்க

அதில் நெருப்பவச்சு பொகப்பிடிப்பது யாருதந்த அறிவுங்க


மது, போதை பொகையில மெல்லக்கொல்லும் நஞ்சுங்க

இதில் எப்படியோ மாட்டிக்கிட்டோம் தப்பிக்க வழியிருக்கு

வாருங்க எல்லோரும் வாருங்க

பிரம்ம குமாரிகளின் ராஜயோக பயிற்சி பெற்று

சுலபமா மீளுங்க



சொர்கத்தின் பாதையென்று சிலர்பேச்சை கேட்டுகிட்டு

குட்கா, போதை, ஊசின்னு போகாதிங்க

இத வெளயாட்டா நெனச்ச பலபேர மருத்துவமனையில் பாருங்க

புழுவுக்கு ஆசைப்பட்டு மீன்வந்து தூண்டிலுல

மாட்டிகிட்ட கதையா ஆனாதுங்க

போதையில் சிக்கிக்கிட்டு தவிப்போரே சீர் திருந்த வாருங்க


மது, போதை பொகையில மெல்லக்கொல்லும் நஞ்சுங்க

இதில் எப்படியோ மாட்டிக்கிட்டோம் தப்பிக்க வழியிருக்கு

வாருங்க எல்லோரும் வாருங்க

பிரம்ம குமாரிகளின் ராஜயோக பயிற்சி பெற்று

சுலபமா மீளுங்க