Lyrics

Lyrics - Sentamil Naadudhaan (Tamizhan Awards Theme Song 2023) - Composer, Music Producer & Arranger - S. J. Jananiy

Singers - Satyan Mahalingam & S. J. Jananiy; Lyrics - Carmel Ignatius

Scale - C#


தொகையறா

செப்புத்தமிழ் சங்கத்தமிழ் கல் தமிழ் பானைத்தமிழ்
ஒலைத்தமிழ் இயல் தமிழ் இசைத்தமிழ் கூத்துத்தமிழ்
மரபுத்தமிழ் தங்கத்தமிழ் தூயதமிழ் நுண் தமிழ்
வன்தமிழ் மென்தமிழ் அருந்தமிழ்

கலைத்தமிழ் வலைத்தமிழ் என பல பல வகைத்தமிழ் - (Male)
முத்தமிழ் முத்துதமிழ் வான் புகழ் வாழும் தமிழ் - (Male)

முத்தமிழ் முத்துதமிழ் வான் புகழ் வாழும் தமிழ்

இது தொன்மையம்மா கல் தோன்றா காலத்து தொன்மையம்மா
இது பன்மையம்மா பல குணங்கள் கொண்ட பன்மையம்மா


Male & Female & Chorus - twice
செந்தமிழ் நாடுதான் இது செந்தமிழ் நாடுதான்
பைந்தமிழ் பூமிதான் இது பைந்தமிழ் பூமிதான்

அழகாய் அழகழகாய் பூத்ததோ
அறிவால் ஆறறிவால் வார்த்ததோ

உறவால் அன்புறவால் கோர்த்ததோ - Male
தமிழால் செந்தமிழாய் சிறந்ததோ – Male


Male & Female & Chorus - twice
செந்தமிழ் நாடுதான் இது செந்தமிழ் நாடுதான்
பைந்தமிழ் பூமிதான் இது பைந்தமிழ் பூமிதான்


ஒன்றே குலம் ஈரடி மறை மூவகை தமிழ் நாலடி நீதி
ஐவகை நிலம் அறுவகை சுவை - Female
ஏழிசை காற்று எட்டுத்தொகை ஒன்பான் சுவை பத்துப்பாட்டு - (Male)
பத்துப்பாட்டு


Rap Section:

பாரி தேரிலே முல்லை மலர்ந்தது - (Male)
மாரி மனசுபோல் ஈரம் கொண்டது - (Male)
மாரு காட்டினோம் வீரம் விளைந்தது - (Male)
தேரு காலில்தான் நீதி பிறந்தது - (Male)
கங்கைக் கரையிலே கடாரத்தரையிலே
சங்கு முழங்கவே எங்கும் தமிழ்க்கொடி
ஆனைகட்டியே அணைகள் கட்டியே
சேற்று வயலிலே சோற்றுப்பயிர் செய்தோம்


மாரு காட்டினோம் வீரம் விளைந்தது - (Male)
தேரு காலில்தான் நீதி பிறந்தது - (Male)
பாரி தேரிலே முல்லை மலர்ந்தது
மாரி மனசுபோல் ஈரம் கொண்டது

கங்கைக் கரையிலே கடாரத்தரையிலே - (Male)
சங்கு முழங்கவே எங்கும் தமிழ்க்கொடி

ஆனைகட்டியே அணைகள் கட்டியே
சேற்று வயலிலே சோற்றுப்பயிர் செய்தோம்
தூணைத் துரும்பையும் ஏணியாக்கினோம் - (Male)
வான வயலிலே வரப்பு கட்டினோம் - (Male)

சிந்தையாவிலும் சந்தமாகுமே
தொப்புள் கொடியிலும் தொக்கி நிற்குமே

பிறப்பொக்குமே எல்லா உயிர்க்குமே - Female & Male
வந்தார் யாவரையும் வாழ வைக்குமே - Female & Male

யாதும் ஊரே யாவரும் கேளிர் - Male
யாதும் ஊரே யாவரும் கேளிர் - Female & Male - twice

Male & Female & Chorus - twice
செந்தமிழ் நாடுதான் இது செந்தமிழ் நாடுதான்
பைந்தமிழ் பூமிதான் இது பைந்தமிழ் பூமிதான்

——